என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர் பலி"
கரூர் தொழிற்பேட்டை அண்ணாநகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 27). இவர் தமிழக காவல்துறையில் அதிரடிப்படை போலீஸ்காரராக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், இன்று அதிகாலை கரூர் நெரூரில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஒத்தக்கடை அருகே செல்லும் போது எதிரே மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மதன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மதன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கரூர் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதன்ராஜ் தமிழ்நாடு இளைஞர்காவல் படை மூலம் வாங்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் தமிழக காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்மிடிப்பூண்டி:
தேர்தல் பறக்கும் படை அதிகாரியான மீஞ்சூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் 3 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட ஆரணியில் இருந்து புதுவாயல் நோக்கி ஒரு ஜீப்பில் சென்றனர்.
ஜீப்பை டிரைவர் கண்ணன் ஓட்டினார். அதில் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியற்றி வந்த கோவிந்தசாமி (வயது 55) மற்றும் போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், பெண் காவலர் இந்துமதி ஆகியோர் இருந்தனர்.
புதுவாயல் அருகே ஜீப் சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய போலீஸ்காரர் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குண சேகரன், டிரைவர் கண்ணன், போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், இந்துமதி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் குணசேகரன், கமலநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பலியான கோவிந்தசாமியின் சொந்த ஊர் தொளவேடு காலனி ஆகும். அவருக்கு லீலாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
தொடர் பணி மற்றும் அதிகாலை நேரத்தில் சென்றதால் டிரைவரின் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயதேவன் (வயது 30). கடந்த 2011-ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாதுகாப்பு பணிக்காக ராமேஸ்வரத்திற்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ்காரர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த செண்பகம் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.
இதனிடையே இருவரும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். செண்பகம் திருவெறும்பூர் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தார். அவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காதலை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி அடுத்த மாதம் 17-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் நடத்தி முடித்தனர். இதனிடையே கடந்த 17-ந்தேதி ஜெயதேவன் நவல்பட்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே அவர் வயிற்றுப்புண் மற்றும் குடல் வால்வு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை செய்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் விடுப்பு எடுத்து சிகிச்சை மேற்கொண்டார்.
கடந்த 28-ந்தேதி வயிற்று வலி அதிகமாகவே, வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காதலன் விஷம் அருந்திய தகவல் கிடைத்ததும் திருச்சிக்கு விரைந்து வந்த செண்பகம், ஜெயதேவனை உடனிருந்து கவனித்து கொண்டார். இருப்பினும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஜெயதேவன் தற்கொலை முயற்சி குறித்து திருச்சி துவாக்குடி போலீசாரும், செண்பகம் தற்கொலை முயற்சி குறித்து ராமேஸ்வரம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயதேவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
ராமநாதபுரம்:
விருதுநகர் மாவட்டம், பரளச்சி அருகே உள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையன் (வயது 28). இவர் ராமநாதபுரம் ஆயுதப் படையில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பணியில் இருந்த மொட்டையன் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். ராமநாதபுரம் பால்கரை பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் லாரி நின்றது.
இதனை போலீஸ்காரர் மொட்டையன் சரியாக கவனிக்கவில்லை. இதனால் மோட்டார் சைக்கிள், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மொட்டையன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ராமநாதபுரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
லாரி டிரைவர் கமுதி ராமச்சந்திரன் (27) கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான போலீஸ்காரர் மொட்டையனுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). இவர் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து பாலசுப்பிரமணியன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி புறப்பட்டார். ஆத்தூர் கூட்டுசாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிசிக்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த பாலசுப்பிரமணியனின் உடலுக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
மண்ணச்சநல்லூர்:
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. திடீரென பழுதாகவே டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ் வாகனம், லாரியின் பின்புறம் மோதியது. இதில் போலீஸ்காரர் உறையூரை சேர்ந்த பாலசுப்பிரமணி ( வயது 56) சம்பவ இடத்திலேயே இறந்தார். பெரம்பலூரை சேர்ந்த பாண்டியன் (52) படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி கொள்ளிடம் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இரும்பு வியாபாரி. இவரது மனைவி புஷ்பா (வயது 45). இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும், ஹேமா என்ற மகளும் உள்ளனர். இதில் ஹேமா காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஹேமா கணவரின் உறவினர் மணிகண்டன், கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து துவாக்குடி போலீசில் புகார் செய்ய சக்திவேல், புஷ்பா, கார்த்திக் ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை சென்றனர். பின்னர் வீடு திரும்பினர். துவாக்குடி அருகே ராவுத்தன்மேடு பிரிவு சாலையில் சென்ற போது பட்டுகோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அஜேஷ் (50). இவர் கோட்டயம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 9 மணியளவில் இவர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஆடம்பர மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார்.
அதனை நிறுத்துமாறு போலீஸ்காரர் அஜேஷ் சைகை காட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அஜேஷ் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் அஜேஷை கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டயம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்